அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க உதவி திட்டம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

X
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறை நிலைத் தன்மை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை பாதுகாக்க மானியம், வரி விலக்குச் சலுகைகள், ஊக்கத் தொகை, பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கிய ஓர் உதவித் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Next Story

