தொழிலாளி மீது பேருந்து மோதியதில் பலி

தொழிலாளி மீது பேருந்து மோதியதில் பலி
X
மதுரை வாடிப்பட்டி அருகே சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது பேருந்து மோதியதில் பலியானார்
மதுரை வாடிப்பட்டி அருகே வல்லப கணபதி கோயில் தெருவில் வசிக்கும் அன்புக்கனி( 65) என்பவர் பலசரக்கு கடையில் வேலை பார்த்தார். இவர் நேற்று (செப்.2) மதியம் மிதிவண்டியில் பேருந்து நிலையம் அருகே உள்ள வார சந்தைக்கு வந்த போது பேரூராட்சி அலுவலகம் எதிரே திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து மிதிவண்டியில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story