சேலம் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்தவர் சிக்கினார்

X
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் வந்த அரசு பஸ்சில் பொட்டியபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பச்சையப்பன் (வயது 50) பயணம் செய்தார். அப்போது பஸ்சில் முன்பக்க இருக்கையில் அமர்ந்து இருந்த கல்லூரி மாணவியிடம் பச்சையப்பன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, பச்சையப்பனை கண்டித்துள்ளார். உடனே பஸ்சில் இருந்த சக பயணிகள் பச்சையப்பனுக்கு தர்மஅடி கொடுத்து தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்.
Next Story

