பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு

X
சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பில் பேரிடர் கால செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி மூக்கனேரியில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவியருக்கான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, நீர்நிலைகளில் விழுந்தவர்களை காப்பாற்றுவது, பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட செயல்முறை விளக்கங்கள் மாணவ மாணவியருக்கு தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், சாலையில் விழுந்த மரங்களை துரித நடவடிக்கைகளால் அகற்றுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story

