நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
கள்ளக்குறிச்சி நகராட்சி சுமங்கலி நகர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மருத்துவ துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட 13 அரசு துறைகளைச் சேர்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டது. முகாமினை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து, மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பெற வேண்டும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அனைத்து மனுக்களுக்கும் 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Next Story

