நாள்தோறும் டன் கணக்கில் செல்லும் பூக்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

X
கேரளாவில் இந்தாண்டு ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து தினந்தோறும் 10 முதல் 30 டன் வரை வாடாமல்லி, செண்டுமல்லி, செவ்வந்தி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் அனுப்பபடுகிறது. குறிப்பாக 2024ல் கிலோ வாடமல்லி ரூ.10 க்கு கூட வாங்க ஆள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2024ல் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லாததால் பல டன் பூக்கள் தேக்கமாக விவசாயிகள், வியாபாரிகள் பெரும் நஷ்டமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

