சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!

X
தூத்துக்குடி மாநகராட்சி சின்னகண்ணுபுரம் பகுதியில் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் சில நாள்களுக்கு முன்பு மழைநீர் செல்வதற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்பணியின் போது இருந்த 15 அடி ரோடு 7 அடியாக மாறியது. இதனால் அந்த சாலையில் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,பொதுமக்கள்,வியாபாரிகள் என பலருக்கு விபத்துக்கள் நேரிடுகிறது. 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் இந்த சாலை அதிகளவில் பாதிக்கப்பட்ட பொழுது இதனை சரி செய்யவில்லை. மேலும் தற்பொழுது இச்சாலை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது ஆகையால் இதில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

