குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

X
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சுந்தரபுரியில் குடிநீர் வேண்டி இன்று (புதன்கிழமை) காலை 8 மணி அளவில் பொதுமக்கள் காலி குடங்களுடன் திண்டுக்கல் - எரியோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். மறியலின் போது அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.
Next Story

