தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய பேராயராக ஐசக் வரபிரசாத் நியமனம்

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய பேராயராக ஐசக் வரபிரசாத் நியமனம்
X
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திர மாநிலம், ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திர மாநிலம், ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பொறுப்பு பேராயராக கோவை பேராயர் தீமோத்தி ரவிந்தர் கடந்த ஜீலை மாதம் முதல் பதவிப் பொறுப்பேற்று இருந்து வந்த நிலையில், திடீரென சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் கே. ரூபன் மார்க் ஆணையின் படி, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திரா ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவி பொறுப்பேற்க இன்று ஆந்திராவிலிருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை புரிந்த திருமண்டல பொறுப்பு பேராயர் ஐசக் வரபிரசாத்தை முன்னாள் நிர்வாகிகள் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் பிரேம்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெருமன்ற மற்றும் சபை பிரதிநிதிகள் தேர்தல் வருகிற செப்டம்பர் 7ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பொறுப்பு பேராயர் மாற்றப்பட்டுள்ளது திருமண்டல மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Next Story