ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், மத்திய செயற்குழுக் கூட்ட முடிவின்படி, 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 03.09.2025 மற்றும் 04.09.2025 ஆகிய இரண்டு தினங்கள் 14,000 வருவாயத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.புதன்கிழமை காலை 11 மணி அளவில் தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு, தருமபுரி மாவட்ட தலைவர் தோழர். சி. துரைவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தோழர். ம. சிவன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலரின் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள். ராஜா மற்றும் தனபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக, மாவட்ட பொருளாளர் தோழர். இல. பகவதி நன்றியுரை வழங்க ஆர்பாட்டம் நிறைவுற்றது. இந்த ஆர்பாட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அளவுக்கு அதிகமான பணி அழுத்தத்தை களைந்திட வேண்டும் என்றும், முகாம்களின் எண்ணிக்கையை மனிதாபிமான அடிப்படையில் குறைத்திட வேண்டும் என்றும், இதற்கான நிதி மற்றும் கூடுதல் பணியிடங்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும், மேலும் கலைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை பணியிடங்களில் 38 பணியிடங்களையும் Contract அடிப்படையில் நியமனம் செய்வது சரியானதன்று. ஏற்கனவே இருந்தது போன்று மீண்டும் நிரந்தர அடிப்படையில் பணியிடங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வேலை நிறுத்தத்தின் காரணமாக, இணையவழி சான்றுகள், இணையவழி பட்டா வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அலுவலர்கள் இன்றி காணப்பட்டது
Next Story




