கோவை மெட்ரோ – ரயில் நிலையங்கள் விரிவாக்கம் - ராஜ்குமார் விளக்கம் !

கோவை மெட்ரோ – ரயில் நிலையங்கள் விரிவாக்கம் - ராஜ்குமார் விளக்கம் !
X
கோவையில் மெட்ரோ, ரயில் நிலையம், விமான நிலையம் – புதிய முன்னேற்றங்கள் குறித்து கணபதி ராஜ்குமார் விளக்கம்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் நேற்று தெரிவித்ததாவது, கோவை மத்திய ரயில் நிலையத்துடன் சேர்த்து போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களும் விரைவில் பொதுப் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். வடகோவை நிலைய பணிகள் பிப்ரவரிக்குள் முடிவடையும் என்றும், கோவையிலிருந்து வேளாங்கண்ணி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி ரயில் சேவையை கோரியுள்ளோம் என்றும் கூறினார். மெட்ரோ ரயில் திட்டம் உக்கடம்–நீளம்பூர், உக்கடம்–வலியம்பாளையம் வழித்தடங்களில் தொடங்கியுள்ளதாகவும், சர்வே மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அவிநாசி சாலையில் மேம்பாலத்துடன் இணைந்து மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விமான நிலைய விரிவாக்கம் மத்திய அரசின் பொறுப்பில் உள்ளதாகவும், மாநில அரசு நிலங்களை ஏற்கனவே ஒப்படைத்துள்ளதாகவும், ஆனால் பணிகள் தாமதமாக நடப்பதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story