ஓணம் பண்டிகைக்காக கோயம்புத்தூரிலிருந்து டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி !

ஓணத்திற்காக கோவையிலிருந்து விமானம் மூலம் பூக்கள், பழங்கள் ஏற்றுமதி.
விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூரிலிருந்து டன் கணக்கில் பூக்கள் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்படுகின்றன. தங்க மஞ்சள் சாமந்தி, கிரிஸான்தமம், வாடாமல்லி, சம்பங்கி, துளசி, ரோஜா, மதுரை மல்லி உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை ஓணத்தின் பாரம்பரிய பூக்கோலங்கள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டிலிருந்து நேந்திரம் வாழை மற்றும் பல்வேறு பழங்களும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.
Next Story