அத்தை வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்: இளைஞர், அத்தை மீது வழக்கு !

கோவை மாணவி புகார் – பாலியல் வன்கொடுமையில் இளைஞர், அத்தை குற்றம்சாட்டு.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது அத்தை வீட்டில் பிசியோதெரபி செய்ய வந்ததாக கூறப்படும் சாகின் என்ற இளைஞரால் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தில் சாகினுக்கு உதவியாக இருந்ததாக அத்தை ஸ்ரீஜாவுக்கும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சாகின் மற்றும் ஸ்ரீஜா மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால், இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவியின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.
Next Story