சாத்தான்குளம் புதிய டிஎஸ்பி ஆவுடையப்பன் பொறுப்பேற்பு

சாத்தான்குளம் புதிய டிஎஸ்பி ஆவுடையப்பன் பொறுப்பேற்பு
X
சாத்தான்குளம் புதிய டிஎஸ்பி ஆவுடையப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாத்தான்குளம் புதிய டிஎஸ்பி ஆவுடையப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார்.  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆக இருந்த சுபக்குமார் திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்லை உதவி போலீஸ் கமிஷனராக இருந்த ஆவுடையப்பன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று சாத்தான்குளம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  பின்னர் அவர் கூறுகையில், சாத்தான்குளம் பகுதியில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தப்படும். பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும், போலீசாரிடம் தெரிவித்து தீர்வு காணலாம். அதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் போதைப்பொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், என்னை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
Next Story