கோவை கெம்பனூரில் சாதிய தீண்டாமைக்கு எதிராக போராட்டம் !

X
கோவை, கெம்பனூர் பகுதியில் 21-ஆம் எண் அரசு பேருந்து அண்ணாநகர் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு “சாதிய தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்”, “ஜாதி வெறியர்களை கைது செய்” என முழக்கமிட்டனர். போராட்டக்காரர்கள் மனு அளித்து, பேருந்து சேவையை உடனடியாக அண்ணாநகருக்குள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர்.
Next Story

