கரூர்-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூர்-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
கரூர்-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் வருவாய்த்துறை மாநில துணைத்தலைவர் அன்பழகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 564 அலுவலக உதவி பணியாளர்களை பணி அமர்த்த அரசாணை வெளியிட்டும் நிரப்பாத பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தேவையான நிதி உதவி கம்ப்யூட்டர் உள்ளிட்ட கட்டமைப்பு பொருட்கள் வழங்க வேண்டும்.ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை வட்டாட்சியர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். ஜூலை 1-ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அனுசரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story