புத்தாம்பூர்-நடந்து சென்ற இளம்பெண் மீது லாரி மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

புத்தாம்பூர்-நடந்து சென்ற இளம்பெண் மீது லாரி மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.
புத்தாம்பூர்-நடந்து சென்ற இளம்பெண் மீது லாரி மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் பாகநத்தம் அருகே வெடிக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல் மனைவி மதுபாலா வயது 35. இவர் திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில் புத்தாம்பூரிலிருந்து பாகனத்தம் செல்லும் கிராம சாலையில் தனியார் விதை நிறுவனத்துக்கு முன்பு நடந்து சென்ற போது, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அக்காடவள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜா வயது 49 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி நடந்து சென்ற மதுபாலா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சம்பவம் அறிந்த மதுபாலாவின் கணவர் முத்துவேல் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய ராஜா மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Next Story