பொதுபாதையை மீட்கும் போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருக்கும் போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி

X
அரியலூர், செப்.3- அரியலூர் பொதுபாதையை மீட்கும் போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார் அரியலூர் வார சந்தை அருகில் செட்டி ஏரியை ஒட்டி இருந்த வண்டி பாதையை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை குடியிருப்பு வளாகம் கட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதை காவல் துறைக்கு வருவாய் துறையினர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது இதனால் ஏற்கனவே வண்டி பாதையை பயன்படுத்தி வந்த மற்றும் காவலர் குடியிருப்புக்கு பின்னால் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பாதையை பயன்படுத்த முடியாமல் இருந்தனர் இதனையடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை காவல்துறைக்கு கொடுத்ததை ரத்து செய்து பொது பாதையாக மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் இன்று போராட்டம் நடத்த தயாராகினர் அப்போது கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் வலியுறுத்தியதை தொடர்ந்து மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அரியலூர் கோட்டாட்சியர் கோவிந்தராஜுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் அப்போது மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார் சுமார் மூன்று மணி நேரமாகியும் எவ்வித முடிவும் பேச்சு வார்த்தையில் எட்டப்படாத நிலையில் மார்க் திஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய பொது பாதையை காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்தது கண்டிக்கத்தக்கது இதற்கு காரணமான அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்த பொது பாதையாக இருந்த இடம் தற்போது பயன்பாடு இல்லாமல் தான் உள்ளது எனவே பாதையை காவல்துறையினிடமிருந்து மீட்டு பொது பாதையாக வருவாய் துறை மாற்ற வேண்டும் இது காவல்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் இடையே உள்ள பிரச்சனை என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மாவட்ட ஆட்சியரும் கலந்து பேசி இப்ப பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் பொதுப் பாதையை மீட்கும் நடவடிக்கையில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டமாகவும் மாற வாய்ப்பு உள்ளது அத்தகைய சூழ்நிலை உருவாக்காமல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எண்ணுவதாக கூறினார்.
Next Story

