அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் நிகழ்ச்சி

X
Komarapalayam King 24x7 |3 Sept 2025 7:33 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு நான் முதல்வன் நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு நான் முதல்வன் நிகழ்ச்சி முதல்வர் சரவணாதேவி தலைமையில் நடந்தது. நான் முதல்வன் திட்டம் மூலம், மாணாக்கர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு, வாழ்வில் முன்னேறலாம். இதில் வழங்கக்கூடிய பயிற்சிகள் தாங்கள் பயிலும் கல்விக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் நல்ல வேலை வாய்ப்புகள் பெற முடியும். என்று சிறப்பு அழைப்பாளர்கள் பேசினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர்கள் முரளிதரன், ஷ்யாம் குமார், அன்புமணி, தயாளன் கண்ணன், உள்பட பலர் பேசினார்கள்
Next Story
