சாலையின் ஓரமாக நின்றவர் மீது கார் மோதி விபத்து

குமாரபாளையத்தில் சாலையின் ஓரமாக நின்றவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் ஆலங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் சுரேஷ், 33. செண்டரிங் வேலை. இவர் நேற்றுமுன்தினம் மதியம் 12:30 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, பெட்ரோல் பங்க் எதிரில், நாதன் பேக்கரி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தார். . அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஸ்கோடா கார் இவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் , திருப்பூர் மாவட்டம், மைலாடி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் செந்தில்வேல், 39, என்பவரை கைது செய்தனர்.
Next Story