தொடர் மழையால் டிவைடர்களில் தேங்கிய மண் குவியல்அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர்

X
Komarapalayam King 24x7 |3 Sept 2025 7:40 PM ISTகுமாரபாளையத்தில் தொடர் மழையால் டிவைடர்களில் தேங்கிய மண் குவியல்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
குமாரபாளையம் நகரில் தினமும் மழை பெய்து வருவதால், பிரதான சாலையான சேலம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு வரை 2 கி.மீ தூரம் டிவைடர்கள் வைக்கபட்டுள்ளன. இதன் அருகே மழை நீரால் மண் குவியல் ஏற்பட்டுள்ளது. டூவீலர்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இதனால் இந்த மண் குவியல்களை அகற்றி, விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறை தொழிலாளர்கள் டிவைடர் பகுதியில் உள்ள மண் குவியல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் விபத்து அபாயம் நீங்கி சேலம் சாலையில் டூவீலர்களில் சென்று வருகிறார்கள்.
Next Story
