உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
Komarapalayam King 24x7 |3 Sept 2025 7:43 PM ISTகுமாரபாளையத்தில் 8வது கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 20,29,30 ஆகிய வார்டுகளுக்கு 8வது கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம், நகராட்சி ஆணையாளர் ரமேஷ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர், வடக்கு நகர் தி.மு.க. பொறுப்பாளர் விஜய் கண்ணன் துவக்கி வைத்தார். இம்முகாமில் நகராட்சி நிர்வாகத்துறை, வருவாய் துறை, மின்சார துறை, மருத்துவத்துறை, ஆதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலை துறை,ஆதார் மையங்கள், இ சேவை மையங்கள் உள்ளிட்ட 13 துறைகள் மூலம் , நகராட்சி சொத்து வரி குடிநீர் வரி பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம்,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனம் மற்றும் உதவித்தொகை, பட்டா, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, புதிய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை , மருத்துவ முகாம் ஆகிய 43 வகையான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொண்டனர். இம்முகாமில் மனு செய்த சில மணி நேரத்தில் மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட்டது. நகர மன்றத் துணைத் தலைவர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள்,வேல்முருகன், வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, மின்சாரத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஐயப்பன், விக்னேஷ்,நாகராஜ், பாலசுப்பிரமணியன், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
