படிப்பறிவு என்பது ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய ஆயுதம். அந்த வகையில் நம் நாட்டை, சமூகத்தை காக்கக் கூடிய ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச

படிப்பறிவு என்பது ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய ஆயுதம். அந்த வகையில் நம் நாட்டை, சமூகத்தை காக்கக் கூடிய ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச
X
படிப்பறிவு என்பது ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய ஆயுதம். அந்த வகையில் நம் நாட்டை, சமூகத்தை காக்கக் கூடிய ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்- பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று(02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்ததாவது:- ஒரு மாணவனின் இயல்பான திறமையை வெளிக் கொணர்வதுதான் கல்வி, செயல்கள் அடிப்படையில் தான் கற்கின்ற கல்வியை மாணவன் எவ்வாறு பயன்படுத்திகிறான் என்ற கற்றல் அடைவை ஆய்வு செய்வதற்கே இந்தப் புதிய ஆய்வு உத்தி கையாளப்பட்டு வருகிறது. ஏற்கனவே எண்ணும் எழுத்தும் என்ற திட்டமும், திறன் வகுப்பறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. மாணவரின் கற்றல் அடைவு சோதிக்கப்படுகின்ற போதுதான் தான் கல்வியில் எந்த நிலையில் அவன் இருக்கிறான் என்பது தெளிவாகிறது. இதை அறிந்து கொண்டு மாணவன் கற்றல் குறைபாடு எத் திறனில் இருக்கிறது அதற்கேற்ப மாணவனுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் கவனம் கொடுக்கப்பட்டு, முழுத் திறமையுள்ள மாணவனாக மாற்றுவதுதான் இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம். ஏறத்தாழ 2 முதல் 3 மாதங்களாக ளுடுயுளு க்கான முழு அறிக்கை பெறப்பட்டவுடன் இதற்கான ஆய்வுக்கூட்டம் பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனடிப்படையில் இந்த ஆய்வுக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் உள்ளன. எங்கெல்லாம் உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றது. எங்கெல்லாம் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநில அளவிலான அடைவுத் தேர்வு முடிவுகள் மூலம் நீங்களும் எப்படி பணியாற்றலாம் என்பது அறிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கான கூட்டம் தான் இது. ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு இன்று 26 வது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை என்பது மிகவும் முக்கியமான துறை. தலைமையாசிரியர்களாக நீங்கள் முதலில் தங்களுக்கான பொறுப்புகளை புரிந்து அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு தங்களுக்கான நிறை, குறைகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு குழந்தைகள் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று நினைக்காமல், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் முழுமையான அந்த வகுப்பிற்கான கற்றல் அடைவு பெற்று அந்த குழந்தைகள் அடுத்த வகுப்பிற்கு செல்வதை உறுதி செய்யவதே முக்கியம். பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் உயர் கல்விக்கு சேர்ந்தால் போதும் என்ற நிலை மாறி தற்போது தலைசிறந்த கல்லூரிகளில் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை பெரும் வகையில் நமது பள்ளி மாணவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் பாடத்தோடு வாழ்க்கைக்கான அறத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களை கற்றல் அடைவு அடைந்திருக்கிறோமா என்று நீங்களே பரிசோதித்து கொள்ள வேண்டும். எட்டாம் வகுப்பு வரை நீங்கள் கற்றல் கற்பித்தலை சிறப்பாக செய்தீர்கள் என்றால் அதற்குப் பின்பான கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு எழுதாகி விடுகிறது. ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். படிப்பு என்பது ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய ஆயுதம். அந்த வகையில் நம் நாட்டை, சமூகத்தை காக்கக் கூடிய ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான். தலைமை ஆசிரியர்கள் மாநில கல்வி கொள்கை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களான இரண்டாம் பெற்றோர்களை நம்பித்தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். தேர்ச்சி மட்டும் இல்லாமல் புரிதலோடு கற்றுக்கொள்ள அவருக்கு சொல்லி தர வேண்டும். அதற்கான பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து இருக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1468 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 981 அரசு பள்ளிகள், 453 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 29,353 இந்த SLAS தேர்வில் கலந்து கொண்டனர். இதில் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் வகுப்பில் மாநில அளவில் 16 வது இடத்தினையும், ஐந்தாம் வகுப்பில் 11 வது இடத்தையும், எட்டாம் வகுப்பில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தரப்பட்டியலில்; விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 58.5 சதவீதம் பெற்று 18 வது இடத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சவால்கள் உள்ளது. அந்த சவால்களை கடந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்கூட்டமானது உங்களை ஊக்குவித்து, அடுத்த முறை இந்த மாவட்டத்திற்கு ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று பாராட்டுகின்ற நிலைக்கு வருவதற்காக தான் நடத்தப்படுகிறது. சிறப்பாக செயல்பட்டிருக்கின்ற பள்ளிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேப்போல் அனைத்து பள்ளிகளும் முதல் இடத்தை பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தின் SLAS அறிக்கை பெறப்பட்டுள்ளது. உதாரணமாக 9 இலட்சத்து 80 ஆயிரத்து 340 குழந்தைகளின் அறிக்கையானது 3 ஆம் வகுப்பு. 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்பு என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருமிருந்து பெறப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்கின்ற பொழுதுதான் நமது மாவட்டத்திற்கு பெருமை. மாநில அளவில் நமது மாவட்டம் 18 ஆவது இடத்தில் இருக்கின்றோம். அதனை உயர்த்துவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அறிக்கை என்பது ஒவ்வொரு பள்ளிகளுக்குமானது. எனவே அந்தந்த பாட ஆசிரியர்கள் அனைத்து சூழ்நிலையும் புரிந்து கொண்டு முன்னேறுவதற்கு செயல்பட வேண்டும். SLAS அறிக்கை குறித்த கருத்து பற்றி நாம் அனைவரும் உள்வாங்கி கொள்ளவேண்டும். தலைமையாசிரியர் என்பவர்கள் கப்பலின் தலைவர் போன்று ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்றவுடன் அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும் உங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். ஆகவே, SLAS அறிக்கையினை முன்னேற்றுவதற்கு அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
Next Story