அதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொள்ள இருந்த கூட்டத்தில் காரை ஓட்டி வந்தது திமுகவை சார்ந்த பிரமுகரின் மகன் சிறுவன்

அதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொள்ள இருந்த கூட்டத்தில் காரை ஓட்டி வந்தது திமுகவை சார்ந்த பிரமுகரின் மகன் சிறுவன்
X
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றுவதற்கு முன்னாள் அந்த கூட்டத்திற்குள் சென்ற காரை அதிமுகவினர் கண்ணாடியை உடைத்த நிலையில் அந்த காரை 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் ஓட்டி சென்ற‌ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது*
காரியாபட்டியில் நேற்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றுவதற்கு முன்னாள் அந்த கூட்டத்திற்குள் சென்ற காரை அதிமுகவினர் கண்ணாடியை உடைத்த நிலையில் அந்த காரை 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் ஓட்டி சென்ற‌ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.‌ அப்போது இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னாள் இந்த கூட்டத்திற்குள் காரியாபட்டி சேர்மன் செந்தில் அவருடைய சகோதரர் செளந்தரின் கார் உள்ளே நுழைந்தது. காவல்துறை கடத்தும் கேட்காமல் உள்ளே சென்ற காரை அதிமுகவினர் தடுத்து காரின் கண்ணாடியை உடைத்தனர். அப்போது அந்த சௌந்தரின் மகனை மருத்துவமனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்தக் காரை சௌந்தரின் மகன் 18 வயது பூர்த்தி அடைய சிறுவன் ஓட்டிச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் சிறுவனை வைத்து காரை இயக்கினார்களா என காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story