நாட்டின் பிரச்சனைகளுக்குக் காரணம் காங்கிரஸ் தான் – சீமான் குற்றச்சாட்டு

X
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்வுகள், நீட், காவிரி, கச்சத்தீவு போன்ற முக்கிய பிரச்சனைகளை நீதிமன்றமே முடிவு செய்கிறது என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு என கேள்வி எழுப்பினார். மருத்துவக் கல்வி கொள்ளையை கண்டித்து, இத்தகைய முறைகள் தகுதியானவர்களை அல்ல, போலி மருத்துவர்களை உருவாக்குகின்றன என்றார். ஓட்டு திருட்டு பிரச்சனைக்கு வாக்குச் சீட்டு முறையே தீர்வு எனக் கூறிய அவர், காங்கிரஸ் தான் நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், ஆனால் சில கட்சிகள் அதை புனிதப்படுத்துகின்றன என்றும் கடுமையாக விமர்சித்தார். சாதி பாகுபாடு இன்னமும் நீங்கவில்லை, அதை நாங்கள் சரி செய்வோம் எனவும், தெரு நாய் பிரச்சனைக்கு நாய்களை ஒழிக்காமல் அரசு பராமரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story

