ஊத்துமலையில் புள்ளிமான்கள் வேட்டையில் வன அலுவலர் சஸ்பெண்ட்

ஊத்துமலையில் புள்ளிமான்கள் வேட்டையில் வன அலுவலர் சஸ்பெண்ட்
X
புள்ளிமான்கள் வேட்டையில் வன அலுவலர் சஸ்பெண்ட்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை வனப்பகுதியில் இரு நாட்களுக்கு முன் சங்கரன்கோவிலைச் சேர்ந்த 10 பேர் மூன்று கார்களில் சென்று புள்ளி மான்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடினர். இதில் ஒரு கார் வேகமாக சென்று விபத்துக்குள்ளானதில் வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இரு துப்பாக்கிகள், சுடப்பட்ட மான் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டன. கன்னியாகுமரியை சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் பொன் ஆனந்த், ராஜலிங்கம், நாசரேத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் முக்கிய பிரமுகரான தி.மு.க., இளைஞரணி செயலர் முகேஷ் உள்ளிட்ட ஏழு பேர் இரண்டு கார்களில் தப்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் துவக்கத்திலிருந்து முறையாக நடவடிக்கை எடுக்காத ஊத்துமலை வன அலுவலர் மகாதேவனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவிட்டார்.
Next Story