தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளரிடம் மனு

X
திருநெல்வேலி மாவட்டம் அம்பை ரயில் நிலையத்திற்கு நேற்று தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா வருகை தந்தார். அவரிடம் பயணிகளின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் அளித்தனர். இந்த நிகழ்வின்போது அம்பாசமுத்திரம் ரயில்வே சங்க தலைவர் சரவணன், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Next Story

