ஊதியூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் பெண் பிணம் காவல்துறை விசாரணை

X
காங்கேயத்தை அடுத்த ஊதியூர் வஞ்சிபாளையம் பகுதியில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்து வந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் காமநாயக்கன்பாளையம், கல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி பூங்கொடி (வயது 39) என்பதும், இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பூங்கொடி எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

