தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் கலாச்சார விழா

தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் கலாச்சார விழா
X
தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் கலாச்சார விழா. சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கே.ஒய்.பி.பாலா கலந்து கொண்டார்
தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் கலாசார விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரியின் நிறுவனர் ஜெய்லானி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கே.ஒய்.பி.பாலா கலந்து கொண்டு பேசினார். பல்வேறு நடன போட்டிகளும், குறும்படங்களும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி தலைவர் மரியம் உல் ஆசியா, துணைத்தலை வர்ஹாலிதாசமீம், இயக்குனர் முகமது சதுர்தீன், செயலாளர் பெனாசிர் பேகம், மக்கள் தொடர்பு அலுவலர் சகாபுதின், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், முதல்வர் பாரதி, துணை முதல்வர் தமிழரசி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சோபனா, லியோ உள்பட பலர் கலந்துகொண்டனர். நடிகர் பாலாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Next Story