கோவை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் !

குடும்பத் தகராறு முதல் பணப்பிரச்சினை வரை – 68 மனுக்கள் விசாரணை.
கோவை மாவட்டத்தில், பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் நேரில் ஆஜராகி அளித்த 68 மனுக்கள் விசாரிக்கப்பட்டன. இதில் 1 மனு மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது; 59 மனுக்கள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டன; 8 மனுக்கள் மேல விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இந்த முகாமில் குடும்பத் தகராறு, பணப்பரிமாற்றம், இடப்பிரச்சினை போன்ற குறைகள் தீர்வு கண்டன. கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Next Story