தூத்துக்குடி அருகே மூன்று இடங்களில் தீ விபத்து

தூத்துக்குடி அருகே மூன்று இடங்களில் தீ விபத்து
X
தூத்துக்குடி அருகே மூன்று இடங்களில் தீ விபத்து
தூத்துக்குடி திம்மராஜபுரம் பகுதியில் ஜெயசிங் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காய்ந்த புற்கள் மற்றும் முள்செடிகள் தீப்பிடித்து எரிந்தன. கூட்டாம்புளி, சிறுபாடு அருகே சுந்தர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் முள்செடிகள் காய்ந்த செடிகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், மடத்தூர் இபி காலனியில் முள்செடிகள் குவித்து ஒதுக்கி வைக்கப்பட்ட உடை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து முற்றிலும் அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story