சாலை விபத்தில் வாலிபர் பலி

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் 18 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று (செப்.3) நள்ளிரவில் பேரையூர் ரோடு வலையப்பட்டி அருகில் சாலை விரிவாக்க பணி செய்து கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த எழுமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் மோதியதில் படுகாயமடைந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

