சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
X
முன்னாள் தலைவர் தங்கபாலு பங்கேற்பு
நெல்லையில் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு குறித்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெயக்குமார் (மேற்கு), அர்த்தனாரி (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story