லிங்கத்தூரில் காமாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

லிங்கத்தூரில் காமாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் மேல்பாகம் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஸ்ரீ பெரியசாமி ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சற்றுமுன் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகுவிமர்சையாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுசுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
Next Story