காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!

X
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் அதன் அருகில் இருக்கும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். கல்லூரி முன்புள்ள சாலை ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக இருக்கிறது. எனவே, அப்பகுதியில் விபத்துக்களை தடுக்க கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா சந்தனராஜ் பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுஜித்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பிரசாத், தமிழ் புலிகள் கட்சி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

