வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்எல்ஏ திடீர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்எல்ஏ திடீர் ஆய்வு
X
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்எல்ஏ திடீர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம்,ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஊரப்பாக்கம் மேற்கு அன்னை அஞ்சுகம் நகரிலுள்ள ஐந்து கண் பாலம்,தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள சித்தேரி தாங்கல்,எம்.ஜி.நகர் அடையாறு கால்வாய் முகப்பு பகுதியில் கல்வெட்டு அமைத்தல்,அன்னை அஞ்சுகம் வைகுண்டம் தெருவில் நியாய விலை கடை, அங்கன்வாடி அமைக்கும் இடம் மற்றும் ஊரப்பாக்கம் ஊராட்சியிலுள்ள பழுதடைந்த சாலைகள், மழையினால் பெரிதளவில் பாதிக்கப்படும் சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால் கால்வாய் உள்ளிட்டவைகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் எம் எல் ஏ விடம் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மேலும்,இதனைத் தொடர்ந்து பழுதடைந்த சாலைகள் மற்றும் மழைகாலங்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் சாலைகளை உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன்,ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,துணைத்தலைவர் AVM.இளங்கோவன்,ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,மீனாட்சி,ஒன்றிய கவுன்சிலர்கள்,கிளைகழக செயலாளர்கள் அரசு அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story