வாலாஜாபாத் அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகளை முடிக்க கோரிக்கை

X
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள 35 கிராமங்களில் வசிப்போருக்கு அவசர மருத்துவ உதவிக்கு, வாலாஜாபாத் வட்டார அரசு பொது மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. இதனால், விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு முதலுதவி அளித்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அம்மாதிரியான நேரங்களில் கால விரயம் காரணமாக சில சமயங்களில் உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் ஏற்படுகிறது. இதனால், வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் பணிகள் துவங்கியது. இந்நிலையில், பணிகளை விரைந்து முடித்து பருவ மழைகாலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல தரப்பினரும் கோரிக்கை வீடுத்துள்ளனர்.
Next Story

