கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.
கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 29 & 30வது வார்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன் மண்டல தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முகாமில் அளிக்கப்பட்ட மனுவில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நலத்திட்டங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் செந்தில் பாலாஜிக்கும் நன்றி தெரிவித்தனர்.
Next Story






