ஆலங்குளத்தில் பேருந்தில் தவறவிட்ட நகை ஒப்படைப்பு

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சீதபற்பநல்லூரை சேர்ந்த சுபாஷினி (26), திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவர் உறவினர் நிகழ்ச்சிக்காக பேருந்தில் செல்லும்போது பேருந்தில் கூட்டம் காரணமாக 10பவுன் நகைகள் இருந்த கைப்பையை மற்றொரு பயணியிடம் கொடுத்தார். இவர் இறங்கும் இடம் வந்தவுடன் ஆர்வத்துடன் பேருந்தில் இருந்து இறங்கும்போது பையை மறந்துவிட்டார். உடனே ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, மாறாந்தை சோதனைச் சாவடியில் பேருந்தை சோதனையிட்டு பின்பு நகை ஒப்படைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

