அரவக்குறிச்சி டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.

அரவக்குறிச்சி டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.
அரவக்குறிச்சி டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம். கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் வயது 31. இதேபோல கரூர் பஞ்சமாதேவி கருங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கவியரசு வயது 30. இருவரும் ஆகஸ்ட் 9-ம் தேதி கரூர் - மதுரை சாலையில் டூ வீலரில் சென்றனர். இவர்களது வாகனம் தெரப்பாடி ஆர்ச் அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற கவியரசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அவரை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கவியரசுவின் தாயார் பானுமதி அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story