ராயப்ப கவுண்டன் வலசு-டூவீலர் மீது டாட்டா வாகனம் மோதி விபத்து.

ராயப்ப கவுண்டன் வலசு-டூவீலர் மீது டாட்டா வாகனம் மோதி விபத்து.
ராயப்ப கவுண்டன் வலசு-டூவீலர் மீது டாட்டா வாகனம் மோதி விபத்து. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் வயது 35. இவர் ஆகஸ்ட் 20ம் தேதி காலை 10:45 மணி அளவில் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பாறையூர் - வெங்கடாபுரம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்றார். இவரது வாகனம் ராயப்ப கவுண்டன் வலசு பிரிவு அருகே சென்றபோது எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை பகுதியைச் சேர்ந்த மோகன் வயது 52 வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம் ஐயப்பன் டூ வீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஐயப்பனை அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐயப்பனை அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய மோகன் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story