அன்னூர் அருகே வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது !
கோவை அன்னூர் அருகே பாசகுட்டை பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த பார்த்திபன் (26) என்பவர், தனது வீட்டில் 5 அடி உயர கஞ்சா செடி வளர்த்து, கஞ்சா இலைகளை விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு ரகசிய தகவலாக கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, கஞ்சா செடி, விதைகள் மற்றும் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் பார்த்திபனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story



