சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் நபி துதி பாடல் நிகழ்ச்சி

X
இஸ்லாமியர்கள் நாளை முஹம்மது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு மீலாது நபி நிகழ்ச்சி கொண்டாட உள்ளனர். இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பள்ளிவாசல்களில் மாலை நேரங்களில் நபி துதி பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 4) சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் இறுதி நாள் நபி துதி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மீலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Next Story

