சீவலப்பேரி ஒன்றிய கிளை கழக செயலாளர்கள் கூட்டம்

X
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவின் சீவலப்பேரி ஒன்றிய கிளை கழக செயலாளர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 4) சீவலப்பேரி சமுதாய நலக்கூட்டத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் போர்வெல் கணேசன் தலைமை தாங்கினார். இதில் சாலை வசதி மேம்படுத்த வேண்டும், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

