விளையாட்டு மைதானம் கலெக்டர் பார்வை

X
குமரி மாவட்டம் திருவட்டார் வட்டம், செருப்பாலூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதைத்தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று பார்வையிட்டார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் வினு, திருவட்டார் வட்டாட்சியர்மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

