வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்!

X
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கீழ் கொளத்தூர் கிராமத்தில் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் கணேஷன் என்பவர் வீட்டில் மது பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து 40 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனர்.
Next Story

