ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் தேசிய, தென்னிந்திய போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை..

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் தேசிய, தென்னிந்திய போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை..
X
இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் தேசிய, தென்னிந்திய போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு கணினி அறிவியல் பயிலும் மாணவன் பி..கோபிபிரசாந்த் புது டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்று அந்தமானில் நடைபெற விருக்கும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார். மேலும் இரண்டாமாண்டு தமிழ் பயிலும் மாணவன் எஸ்.ஹரி தெனிந்திய அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்று கோப்பைகளை வென்றுள்ளார். நாமக்கல் முதலமைச்சர் கோப்பை அளவிலான போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் பிரிவில் சிலம்பம் போட்டியில் இரண்டு முதலாமிடமும், நீச்சல் போட்டியில் முதல் மற்றும் இரண்டு மூன்றாமிடமும், மகளிர் ஹாக்கி போட்டியில் மூன்றாமிடமும் மற்றும் மாற்றுதிறனாளிகள் பிரிவில் ஓட்ட போட்டியில் முதலாமிடமும், குண்டெறிதலில் முதல் மற்றும் இரண்டு இரண்டாமிடம் மற்றும் 100 மீ ஓட்டத்தில் முதல், இரண்டு மற்றும் மூன்றாமிடமும் மேலும் ஆசிரியர்கள் பிரிவில் Dr. S.சுபத்ரா மற்றும் Dr. V.சுகந்தி ஆகியோர் கேரம் போட்டியில் இரண்டாமிடமும் பெற்று சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ரூ 40000 ற்கான காசோலையையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் Dr. A யூசுப் கான் அவர்களும், அரசியல் அறிவியல் துறை தலைவர் Dr R.சிவகுமார் அவர்களும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் Dr Aவெண்ணிலா அவர்களும், விளையாட்டு குழு ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள். அனைத்து துறை பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள்..
Next Story