ஜெயங்கொண்டத்தில்  ஏ.பி.என். சில்க்ஸ் திறப்பு விழா பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட தொழிலதிபர்கள்,  வாழ்த்து

ஜெயங்கொண்டத்தில்  ஏ.பி.என். சில்க்ஸ் திறப்பு விழா பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட தொழிலதிபர்கள்,  வாழ்த்து
X
ஜெயங்கொண்டத்தில் ஏ.பி.என். சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் திறப்பு விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட தொழிலதிபர்கள்,  கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அரியலூர், செப்.4- அரியலூரின் அடையாளமாக திகழும் 85 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நான்காவது தலைமுறையாக ஏ.பி.என். ஜவுளி அண்ட் ரெடிமேட் சில்க்ஸ் தரமான ஜவுளிகள் குறைந்த விலையில் என்ற தாரக மந்திரத்துடன் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்று விளங்கி வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் சாலையில் ஏ.பி.என். சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ்  நேற்று வியாழக்கிழமை காலை 10.35 மணி அளவில் டிவிஎஸ் ராஜாராம் மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தலைமையில திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏபிஎன் நிறுவனர்கள் சுதாகர், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமாட்சி சுதாகர், மகாலட்சுமி ஆனந்த் ஆகியோர் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தனர். தர்ஷினி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார், இதில் ரோஹித் கிருஷ்ணன், அனுஷ்கா, ராணி சத்தியமூர்த்தி மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், லயன் சங்க நிர்வாகிகள் மற்றும் கோயில்  நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு தேவையான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளை ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கி சென்றனர். இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள்  ஏபிஎன் ஜவுளி சில்க்ஸ் முற்றிலும் குளிரூட்டப்பட்ட, லிப்ட் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதையும் ஆடவர், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி பிரிவில் எண்ணற்ற டிசைன்கள், ஏராளமான கலெக்–ஷன்களில் வண்ண வண்ண ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் ஆடைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதையும் கண்டு ரசித்தும் தேவையானவற்றை தேர்வு செய்தும், அழகான பரிசு பொருட்களையும் வாங்கி மகிழ்ந்தனர். திறப்பு விழா நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில்  கடைக்கு முன்பாக பெரிய அளவிலான பொம்மை யானையை வைத்து தும்பிக்கையால் தலையை ஆட்டி வரவேற்பது போன்று அமைக்கப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கடையை சுற்றி பார்ப்பதற்கும், கடையநுள் உள்ள ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளை பார்ப்பதற்கும், பார்த்தவற்றை வாங்கி செல்வதற்கும் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் முடிவில் தர்ஷினி நன்றி தெரிவித்தார்.
Next Story