ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ் .பி யிடம் பாதிக்கப்பட்டவர் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ் .பி யிடம்  பாதிக்கப்பட்டவர் புகார்
X
சீட்டு நடத்துவதாக சொல்லி என்னை போன்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். என்னை ஏமாற்றி நம்ப வைத்து சீட்டு நடத்துகிறேன் என்ற போர்வையில் பணத்தை அபகரித்து கொண்ட பச்சையம்மாள் (எ) சூர்யா மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்
பெரம்பலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ் .பி யிடம் பாதிக்கப்பட்டவர் புகார் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தை சார்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் சிவராமன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அதில் என்னை ஆசையவார்த்தை கூறி ஏல சீட்டில் கலந்து கொள் உனக்கு அதிக பண்ணலாம் கிடைக்கும் என்று கூறிய ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி இடம் புகார் மனு கொடுத்துள்ளார் அதில் எங்கள் ஊரை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பச்சையம்மாள் (எ) சூர்யா ஏலசீட்டு நடத்தி வருகிறார். இந்த சீட்டில்11 நபர்கள் சேர வேண்டும்இந்த ஏல சீட்டில் நான் எனது மனைவி எனது மகன் என எங்கள் குடும்பத்தில் மட்டும் மூன்று பேர் அதேபோல் பச்சையம்மாள் என்பவர் இந்த சீட்டில் பச்சையம்மாள் தனது கணவர் தனது மகன் என மூன்று பேர் மூன்று சீட்டு கலந்து கொண்டனர் மொத்தம் 11 சீட்டில் ஆறு சீட்டு கழித்தது போக மீத உள்ளது 5 சீட் அந்த ஐந்து சீட்டும் 5 நபர்கள் பங்கேற்றனர் . ஒரு நபர் ஏலம் எடுத்தால் ரூ.2 லட்சம் எடுத்துக்கொள்வார். கசீர் பணம் 20 ஆயிரத்தை மேற்படி பச்சையம்மாள் 10 நபருக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவார்.அதன் அடிப்படையில் ஏலம் எடுத்தவர்கள் மாதம் ரூ.20 ஆயிரமும் ஏலம் எடுக்காதவர்கள் கசீர் பணம் போக பாக்கி தொகையும் கட்டி வருவது வழக்கம், அந்த வகையில் நான் என் முறை வரும்போது நான் ரூ.2 லட்சம் ஏலம் எடுத்தேன். ஆனால் பச்சையம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் எனது மகனுடைய சீட்டுத் தொகை ரூ.2 லட்சம் பணத்தை இதுநாள் வரை தராமல் ஏமாற்றி விட்டார். என் மனைவி சின்னம்மாள் கடந்த மே மாதம் அவர் முறை வரும்போது ரூ.2 லட்சத்தை பணத்தையும் மேற்படி பச்சையம்மாள் கொடுக்கவில்லை. மற்ற 10 நபர்களும் பணத்தை கட்டி விட்டார்கள். பணத்தை வாங்கிக்கொண்ட பச்சையம்மாள் எனக்கும். என் மனைவிக்கும் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் நானும், எனது மனைவியும்நானும் மாதம் தவறாமல் சீட்டுத்தொகையை செலுத்தி வந்தோம். இதனால் எங்களுக்கு ரூ.4 லட்சம் வர வேண்டியதுகடந்த ஒன்று அஞ்சு 2021 அன்று உடன் சீட்டுக்கணக்கும் முடிந்துவிட்டது இந்த நிலையில் 2, 3, 4, 5 மாதம் தவணை கட்டவில்லை. அந்த பணம் மொத்தம் ரூ.1,98,340/-ம் ஆகும். இதை கழித்ததுபோக ரூ.2,01,660/- பணம் எங்களுக்கு சேர வேண்டும் மேற்படி பச்சையம்மாளிடம் நாங்கள் இனி வரும் காலங்களில் சீட்டுக்கு வரவில்லை இந்த பணத்தை கொடுத்து கணக்கை முடித்துவிடுங்கள் என்று 24.05.2025-ம் தேதி பச்சையம்மாளிடம் கேட்டேன். அதற்கு பச்சையம்மாள் வாடா. போடா என்று தகாத வார்த்தைகள் சொல்லி பணம் கொடுக்க முடியாது என்று சொல்லி உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார். நான் 25.05.2025-ம் தேதி பச்சையம்மாள் என்னை நம்ப வைத்து ஏமாற்றியது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். என்னுடைய புகாரை மங்களமேடு உதவி ஆய்வாளர் இளரவரசன் அவர்கள் விசாரணை செய்தார். விசாரணையில் பணம் தருகிறேன். பாதி பணம் தான் தருவேன். அதுவும் 3 மாதம் கழித்து தான் தருவேன் என்று சொல்லிவிட்டு மரியாதை கொடுக்காமல் சென்று விட்டார். இது குறித்து நான் பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் 28.05.2025-ம் தேதி புகார் கொடுத்தேன். மேற்படி புகாரின் பேரிலும், எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. தினமும் பச்சையம்மாள் என்னை ஊரில் கண்டால் கண்டப்படி திட்டி வம்பு இழுத்து வருகிறார். சீட்டு நடத்துவதாக சொல்லி என்னை போன்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். என்னை ஏமாற்றி நம்ப வைத்து சீட்டு நடத்துகிறேன் என்ற போர்வையில் பணத்தை அபகரித்து கொண்ட பச்சையம்மாள் (எ) சூர்யா மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்என கடந்த மூன்று மாதமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,காவல் தலைவர் | முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் பலமுறை புகார் கொடுத்துள்ளேன் புகாரின் அடிப்படையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனது புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீ குளித்து விடுவதே சரி என தெரிவித்துள்ளார் இப்படி ஏல சீட்டு நடத்த ஏமாற்றிபவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
Next Story