ஸ்ரீபொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

12 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோயில் புனரமைத்து வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் கோயில் நுழைவு வாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 4 ம்தேதி நடப்பதையொட்டி கும்பாபிஷேகத்திற்கு 7 நதி களில் இருந்து புனித நீரால் கோபுர கலசத்துக்கு அபிஷேகம் செய்து ஊற்றப்பட்டது.
பெரம்பலூரில் ஸ்ரீபொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பெரம்பலுார் கலெக்டர் அலுவலக சாலை, அபிராமபுரத்தில் ஸ்ரீ பெத்தநாச்சியம்மன் உடனுறை பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் சுவாமி, ஸ்ரீ கல்லணையான் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. ஸ்ரீபொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோயில் புனரமைத்து வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் கோயில் நுழைவு வாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 4 ம்தேதி நடப்பதையொட்டி கும்பாபிஷேகத்திற்கு 7 நதி களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டுள்ளது. விழாவையொட்டி கடந்த 20ம்தேதி கோயில் வளாகத்தில் கும்பாபிஷேக முகூர்த்த கால் நடுதல் விழா நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 2ம்தேதி மலை 5மணியளவில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 3ம்தேதி காலை 9 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அருட்குரு நாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கிர தேசிக சுவாமிகள் அருளுரை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து (4ம்தேதி) காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 10 மணியளவில் ஆலய விமானங்கள், புதிய நுழைவு வாயில், மூலமூர்த்திகள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆதினங்கள் ரத்தினவேலாயுத பராமசாரிய சுவாமிகள், ஸ்ரீமத் சிவக்கிரக தேசிக சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகா தீபாரதனை, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காரியஸ்தர்கள் கண்ணபிரான், சரவணன், முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், வக்கீல் தமிழ்செல்வன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story